/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
குருப்பநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்
/
குருப்பநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்
குருப்பநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்
குருப்பநாயக்கன்பாளையத்தில் வளர்ச்சி திட்டப்பணி துவக்கம்
ADDED : பிப் 28, 2024 02:18 AM
பவானி:பவானி
யூனியன் குருப்பநாயக்கன்பாளையம் பஞ்சாயத்தில், பல்வேறு வளர்ச்சி
திட்டப்பணிகளை, பவானி எம்.எல்.ஏ., கருப்பணன் நேற்று பூஜை செய்து
தொடங்கி வைத்தார்.
லோகநாதன் ஆஸ்பத்திரி ரோடு, கல்யாணி கெமிக்கல்
ரோட்டில் வடிகால் அமைத்தல், ஆறுமுகம் வீடு முதல் முனியப்பன் வீடு வரை
வடிகால், ஈஸ்வரன் மளிகை கடை வீதியில் கான்கிரீட் ரோடு, காந்தி நகர்
இரண்டா-வது வீதியில் வடிகால் அமைத்தல், செங்காடு-ராணா நகர் ரோடு,
நேதாஜி நகரில் தார்ச்சாலை அமைப்பது என, 99.19 லட்சம் ரூபாய் மதிப்பிலான
பணிகளை தொடங்கி வைத்தார். பஞ்., தலைவர் சுப்பிரமணியம், பவானி யூனியன்
சேர்மேன் பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.