/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழக பண்பாட்டு கண்காட்சி துவக்கம்
/
தமிழக பண்பாட்டு கண்காட்சி துவக்கம்
ADDED : அக் 19, 2024 02:24 AM
ஈரோடு: ஈரோடு, பரிமளம் மஹாலில், தமிழக பண்பாட்டு கண்காட்சி நேற்று துவங்கியது. தமிழக பெண்கள் செயற்களத்தின் சேலம் மாவட்ட செயலாளர் சாரதா வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் இசைமொழி தலைமை வகித்தார். வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.
கண்காட்சி அரங்கில் தமிழர்களின் பழங்கால இசைக்கருவிக-ளான கொட்டு, தவில், மரம், பம்பை, துடி, தமருகம், துடும்பு, சேமக்களம், கெளரிகாளம், பூரிகை என, 80க்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் பார்வைக்கு வைத்துள்ளனர். உலகத்தின் தோற்றம், பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம், பழைய, புதிய கற்காலம், தமிழக பறவைகள், தமிழகம் வந்த ஐரோப்பி-யர்கள், வரலாற்று வீரர்கள், தலைவர்கள், நமது விளையாட்-டுக்கள், அதற்கான பொருட்கள், போட்டோக்கள், காட்சி பொம்-மைகளும் இடம் பெற்றுள்ளன. இக்கண்காட்சி நாளை வரை நடக்கிறது.

