ADDED : பிப் 10, 2025 01:58 AM
ஈரோடு : ஈரோடு ஸ்டோனி ப்ரிட்ஜ் மீன் மார்க்கெட்டுக்கு நாகை, துாத்துக்குடி, ராமேஸ்வரம், காரைக்கால் மற்றும் கேரளாவில் இருந்து கடல் மீன், அணை மீன்கள் நேற்று விற்பனைக்கு வந்தது.
கடந்த வாரம், 25 டன்னாக இருந்த வரத்து, 15 டன்னாக நேற்று குறைந்தது. இதனால் விலை அதிகரித்தது. கடந்த வாரம் ஒரு கிலோ வஞ்சிரம், 800 ரூபாய்-க்கு விற்கப்பட்டது. நேற்று, 950 ரூபாயாக உயர்ந்தது. இதேபோல், 900 ரூபாய்க்கு விற்ற வெள்ளை வாவல், 1,200 ரூபாய்-க்கு விற்றது. பிற மீன்கள் விலை விபரம் (கிலோ-ரூபாயில்): கருப்பு வாவல்--800, கடல் அவுரி-750, முரல்-350, கடல் பாறை-550, கனவா- - 400, சங்கரா-400, விளாமின்-550, டுயானா-700, கிளி மீன்--700, மயில் மீன் - 700, ப்ளூ நண்டு-700, பெரிய இறால்-- 700, சின்ன இறால்-500, தேங்காய் பாறை-550, திருக்கை-400, கொடுவா-- 800, ரெட் சால்-750, சால்மோன்-900, மத்தி-250, அயிலை-300.

