/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு
/
ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை விற்பனை அதிகரிப்பு
ADDED : செப் 25, 2024 01:43 AM
ஈரோடு ஜவுளி சந்தையில்
சில்லறை விற்பனை அதிகரிப்பு
ஈரோடு, செப். 25-
ஈரோட்டில் பன்னீர்செல்வம் பூங்கா கனி மார்க்கெட் வணிக வளாகம், அதை சுற்றிய வாரச்சந்தை கடைகளில் ஜவுளி சந்தை நடந்தது. சில வாரங்களுக்கு பின் நேற்று சில்லறை விற்பனை அதிகமாக நடந்தது.
இதுபற்றி கடைக்காரர்கள் கூறியதாவது: வயநாடு சோகத்தால் ஓணம் பண்டிகை கேரளாவில் பெரிதாக கொண்டாடவில்லை. இதனால் ஒன்றரை மாதங்களாக பெரிய அளவில் மொத்த, சில்லறை ஜவுளி விற்பனை நடக்கவில்லை. தீபாவளிக்கு இன்றும், 36 நாட்களே உள்ள நிலையில் தீபாவளி புத்தாடைகள் வந்துள்ளன. அக்., முதல் வாரம் முதல் தீபாவளி விற்பனை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கிறோம். நேற்று தீபாவளியை நோக்கிய சில்லறை விற்பனை ஓரளவு நடந்தது. வரும் வாரம் முதல் கடைக்காரர்கள், மொத்த வியாபாரிகள், பொதுமக்கள் தீபாவளி கலெக்ஷன்களை வாங்கி செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம். நேற்றைய சில்லறை விற்பனை, 30 சதவீதத்துக்கு மேல் நடந்தது. இவ்வாறு கூறினர்.