/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தீபாவளி புத்தாடை வரத்துடன் சந்தையில் விற்பனை அதிகரிப்பு
/
தீபாவளி புத்தாடை வரத்துடன் சந்தையில் விற்பனை அதிகரிப்பு
தீபாவளி புத்தாடை வரத்துடன் சந்தையில் விற்பனை அதிகரிப்பு
தீபாவளி புத்தாடை வரத்துடன் சந்தையில் விற்பனை அதிகரிப்பு
ADDED : அக் 09, 2024 06:38 AM
ஈரோடு: ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் வணிக வளாக கடை, சுற்றியுள்ள பகுதிகளில் ஜவுளி வாரச்சந்தை நேற்று நடந்தது. தீபாவளிக்கு இன்னும், 23 நாட்களே உள்ள நிலையில் மொத்த மற்றும் சில்லரை ஜவுளி விற்பனை அதிகமாக நடந்தது. தீபாவளி புத்தாடை, நவீன டிசைன்களில் வரத்தானதால் விற்பனையும் அதிகரித்தது.
இதுபற்றி கனி மார்க்கெட் வாரச்சந்தை கடை வியாபாரிகள் சங்க தலைவர் செல்வராஜ் கூறியதாவது: தீபாவளிக்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், அனைத்து வகை ரெடிமேட் ஆடை அனைத்து விலைகளிலும் வரத்தாகி உள்ளது. மும்பை, பெங்களூரு, சூரத் என பல்வேறு பகுதிகளில் இருந்து ஆடைகள் வந்துள்ளன.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா மாநில கடைக்காரர்கள், வியாபாரிகள், மக்கள் மொத்த, சில்லரை விற்பனையில் ஆடைகளை வாங்கி சென்றனர். மழைக்காலம் துவங்குவதால் துண்டு, பெட்ஷீட், பெட் ஸ்பிரட், போர்வை, ஜமக்காளம் போன்றவையும் அதிகம் விற்பனையானது. இவ்வாறு அவர் கூறினார்.