/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தெருநாய்கள் அதிகரிப்பு காங்கேயத்தில் அச்சம்
/
தெருநாய்கள் அதிகரிப்பு காங்கேயத்தில் அச்சம்
ADDED : அக் 15, 2024 02:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், அக். 15-
காங்கேயம் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் ஆடுகள், கோழிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டவை இறந்துள்ளன. உயிரிழந்த ஆடுகளுடன் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனாலும், தெருநாய் தொல்லைக்கு விடிவு கிடைத்தபாடில்லை.
சமீப காலமாக காங்கேயம் நகராட்சி பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து விட்டது. பல இடங்களில் கூட்டம், கூட்டமாக திரிகின்றன. இதனால் குழந்தைகள், பள்ளி மாணவியர், முதியோர் அச்சத்துடனே நடமாட வேண்டியுள்ளது. நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் வேண்டுகோள்
விடுத்துள்ளனர்.

