/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நாட்டு காய்கறி வரத்து அதிகரிப்பு: விலையும் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி

ADDED : செப் 20, 2024 01:33 AM
நாட்டு காய்கறி வரத்து அதிகரிப்பு: விலையும் குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி
ஈரோடு, செப். 20-
புரட்டாசி மாதம் நேற்று முன்தினம் பிறந்த நிலையில், காய்கறி வரத்து அதிகரித்ததுடன், விலையும் குறைந்து காணப்பட்டது.
புரட்டாசி மாதத்தில், பெரும்பாலான வீடுகளில் இறைச்சிகளை சாப்பிடாமல், சைவ உணவுக்கு மாறுவது வழக்கம். ஐயப்ப சீசன் போல, புரட்டாசி மாதத்திலும் இறைச்சி பயன்பாடு குறைந்து காய்கறி, பழங்களின் பயன்பாடு அதிகரிக்கும். இந்தாண்டு நாட்டு காய்களின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைந்துள்ளது.
இதுபற்றி, வியாபாரிகள் கூறியதாவது: கடந்த ஜூலை, ஆக., மாதங்களில் காய்கறி வரத்து சற்று குறைந்தும், விலை அதிகமாகவும் இருந்தது. கடந்த, 15 நாட்களாக தக்காளி, வெங்காயம், நாட்டு காய்களின் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட கூடுதலாக, மூன்று டன்னுக்கு மேல் வரத்தாகிறது. இதனால் விலை
குறைந்துள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிலோ கொத்தவரை-25 ரூபாய், சேனை-80, கருணை-100, இஞ்சி-170, பீன்ஸ்-60, சுரைக்காய்-15, கருப்பு அவரை-100, பட்டை அவரை-45, தக்காளி-30-40, சின்ன வெங்காயம்-50, பெரிய வெங்காயம்-50-70, பரங்கி-20, வெள்ளை பூசணி-20, கத்திரி-20, வெண்டை-20, பாகற்காய்-35, முள்ளங்கி-35, முருங்கை-50, பச்சை மிளகாய்-50, கோஸ்-25, உருளை-50, கேரட்-80, பீட்ரூட்-50, கோவக்காய்-25, மேரக்காய்-25, வெள்ளரி-35, நெல்லி-60, காலிபிளவர்-10-30 ரூபாய் என்ற விலையில் விற்பனையானது. இந்தாண்டு காய் வரத்து அதிகரித்துள்ளதால், பெரிய அளவவில் விலை உயர்வு
இருக்காது.
இவ்வாறு கூறினர்.