sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

பள்ளிகளை தரம் உயர்த்தாததால் மலைப்பகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு

/

பள்ளிகளை தரம் உயர்த்தாததால் மலைப்பகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு

பள்ளிகளை தரம் உயர்த்தாததால் மலைப்பகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு

பள்ளிகளை தரம் உயர்த்தாததால் மலைப்பகுதியில் இடைநிற்றல் அதிகரிப்பு


ADDED : பிப் 16, 2025 04:01 AM

Google News

ADDED : பிப் 16, 2025 04:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மலைப்பகுதி பள்ளிகளை தரம் உயர்த்தாததால் மாணவ, மாண-வியர் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி, புலிகள் காப்பக-மாகவும், பர்கூர் வனப்பகுதி பறவைகள் சரணாலயமாகவும் அறி-விக்கப்பட்டுள்ளது. இங்கு பல நுாறு பெரிய, சிறிய கிராமங்கள் உள்ளன.

இக்கிராமங்களில் சில பள்ளிகள் செயல்பட்டாலும், உயர்நிலை, மேல்நிலை பள்ளி இல்லாததால், சத்தியமங்கலம், அந்தியூர் என சமதளப்பகுதிக்கு பல கி.மீ., துாரம் கடந்து வந்து படிக்க வேண்டி உள்ளது. அதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில், பள்ளி இடை நிற்றல், இளம் வயது திருமணம், கூலி வேலைக்கு செல்லும் நிலை அதிகரித்துள்ளது.

இதுபற்றி கல்வி செயற்பாட்டாளர் சுடர் நடராஜ் கூறியதாவது:

பர்கூர் மலை கொங்காடை கிராமத்தில் உறைவிட பள்ளியில், 156 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி உயர்நிலை பள்ளியாக உள்ளதால், மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். அவ்வாறு இல்லாததால், 60 கி.மீ., துாரம் சென்று அந்தியூரில் படிக்க வேண்டி உள்ளது.

கோட்டாடை நடுநிலைப்பள்ளியில், 80 பேர்; தவளக்குட்டை நடுநிலை பள்ளியில், 120 பேர்; கரளையம் நடுநிலைப்பள்-ளியில், 120 பேர் படிக்கின்றனர்.

இப்பள்ளிகளை தரம் உயர்த்த, அப்பகுதி மக்கள் பங்குத்தொகை-யாக, 1 லட்சம் ரூபாய் செலுத்தி பல ஆண்டுகளாகியும் தரம் உயர்த்தவில்லை. மலைப்பகுதியில் பள்ளி கல்வியை பெற முடி-யாததால், கூலி வேலைக்கு செல்லுதல், படிப்பை பாதியில் விடுதல், இளம் வயது திருமணம், இடம் பெயர்தல் அதிகரிக்கி-றது. மலைப்பகுதி பள்ளிகளுக்கு விதிமுறைகளில் தளர்வு செய்து,

முன்னுரிமைப்படி தரம் உயர்த்திடவும், கூடுதல் பள்ளிகள் திறக்-கவும்

நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us