sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோமாரி நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

/

கோமாரி நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோமாரி நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோமாரி நோய் தாக்குதலை சமாளிக்கும் திறன் காங்கேயம் மாடுகள் எண்ணிக்கை அதிகரிப்பு


ADDED : அக் 12, 2024 07:33 AM

Google News

ADDED : அக் 12, 2024 07:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: கோமாரி நோய் தாக்குதலை தாங்கும் திறன் உள்ளதால் காங்-கேயம் இன மாடுகள் விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெற்று வருவதோடு, வாங்குபவர்கள் எண்ணிக்கை, மாடுகளின் எண்ணிக்-கையும் அதிகரித்து வருகிறது.

கரிய நிறம், கூரான கொம்புகள், மலையை ஒத்த திமில், களிற்றிக்-கீடான கம்பீர தோற்றம் என காண்போரை மிரளவைக்கும் காங்-கேயம் இன காளைகள் உலக பிரசித்தி பெற்றவை. அலங்கா-நல்லூர், பாலமேடு, அவனியாபுரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஜல்லி-கட்டுகளில் தமது பிடிபடாத ஆற்றலினால் புகழ் சேர்ப்பவை.

கடும் வறட்சியையும் தாங்கி, குறைவான தீவனத்தை உட்-கொண்டு, சத்தான பாலைத்தரும் காங்கேயம் இன பசு மாடு-களை,

திருமணமான பெண்களுக்கு தாய் வீட்டு சீதனமாக தரும் வழக்கம் இன்றளவும் மேற்கு தமிழகத்தில் மரபாக

கடைபிடிக்கப்-படுகிறது. விவசாயத்தில் இயந்திரங்கள் பயன்பாடு, அதிக பால் தரும் வெளி-நாட்டு கலப்பின பசுக்கள், ஜல்லிக்கட்டு தடை போன்ற

காரணங்-களால் இவ்வின மாடுகளின் எண்ணிக்கை குறைந்து அழிவின் விளிம்புக்கு சென்றது. தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு

போராட்-டத்தால், இளைஞர்கள் மத்தியில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி-யது.இதனால் இவற்றை வளர்ப்பதும், வாங்குவதும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இந்த மாடுகளின் பால் ஏ-2 ரகம் என்பதால் அதிக சத்து

கொண்டதாக உள்ளது. இதனால் குழந்தைகளுக்கு அதிக அளவில் தரப்படுகிறது. மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்குதல்

இருந்தது. இதில் பெரும்பாலும் கலப்பின மாடுகள், ஜெர்சி, சிந்து மாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டன. ஆனால், நாட்டு மாடுகள் உள்-ளிட்ட

காங்கேயம் இன மாடுகள் பெரிய அளவில் பாதிப்புக்குள்-ளாகவில்லை. தற்போது காங்கேயம் நாட்டின மாடுகளை, மக்கள் விரும்பி

வாங்குவதால், மாடுகள், 25 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை விலை போகிறது. இதனால் மாடு வளர்ப்பவர்-களின் எண்ணிக்கை

அதிகரித்துள்ளது. மாடுகளின் எண்ணிக்கை தற்போது, 20 லட்சமாக உயர்ந்துள்ளது. கால்நடை ஆர்வலர் மேற்-கொண்ட

விழிப்புணர்வு நடவடிக்கையே இதற்கு காரணம் என்று, காங்கேயம் பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us