/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
/
பாசனத்துக்கு நீர் திறப்பு அதிகரிப்பு
ADDED : ஆக 07, 2025 01:44 AM
புன்செய்புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி; மொத்த கொள்ளளவு, 32.8 டி.ம்.சி., அணையின் நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில், கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் கோவை மாவட்டம் பில்லுார் அணையில் திறக்கப்படும் நீர், பவானிசாகர் அணைக்கு வருகிறது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணை நீர்மட்டம், 101.95 அடியை எட்டியது.
நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 3,027 கன அடியாக இருந்தது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு, 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி பாசனத்துக்கு வினாடிக்கு, 1,900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் அரக்கன்கோட்டை-தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் பாசனத்துக்கு, 1,000 கன அடி நீர், குடிநீர் தேவைக்கு, 100 கன அடி என மொத்தம் 3,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்மட்டம் 101.95 அடி; நீர் இருப்பு, 30.2 டி.எம்.சி.,யாக இருந்தது.

