/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினவிழா போட்டி
/
அரசு அருங்காட்சியகத்தில் சுதந்திர தினவிழா போட்டி
ADDED : ஆக 15, 2025 02:13 AM
ஈரோடு, சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஈரோடு அரசு அருங்காட்சியகம் மற்றும் தீந்தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு, திறன் மேம்பாட்டு போட்டி நேற்று நடந்தது. மூன்று பிரிவுகளாக கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளி, கல்லுாரிகளை சேர்ந்த, 250க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஓவியப்போட்டியில் அருள்நெறி பள்ளி மாணவன் மோசஸ், கலைமகள் கல்வி நிலைய மாணவி சன்மதி வெற்றி பெற்றனர். பேச்சு போட்டியில் அரசு கல்லுாரி மாணவன் பிரபாகரன், கட்டுரை போட்டியில் தனியார் கல்லுரி மாணவி சுபிக்சா வென்றனர். பள்ளி அளவிலான பேச்சு போட்டியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவன் அதர்வ் ஷரெஜ், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மாணவி கோபிகா வெற்றி பெற்றனர்.
கட்டுரை போட்டியில் கலைமகள் பள்ளி மாணவி ஸ்ரீநிதி மற்றும் அனிதா பானு வெற்றி பெற்றனர். தமிழக அரசின் துாயத்தமிழ் பற்றாளர் கீர்த்தனா, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார். போட்டிக்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாளர் ஜென்சி
செய்திருந்தார்.