/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மனிதாபிமானமே இல்லாத தேர்தல் ஆணையம் ஈரோட்டில் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்
/
மனிதாபிமானமே இல்லாத தேர்தல் ஆணையம் ஈரோட்டில் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்
மனிதாபிமானமே இல்லாத தேர்தல் ஆணையம் ஈரோட்டில் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்
மனிதாபிமானமே இல்லாத தேர்தல் ஆணையம் ஈரோட்டில் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்
ADDED : ஜன 23, 2025 06:29 AM
ஈரோடு: ''தேர்தல் ஆணையத்துக்கு, மனிதாபிமானமே இல்லை,'' என, தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க., வேட்பாளர் சந்திரகுமாருக்கான பணிமனையில், காங்., சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி, எம்.பி.,க்கள் அந்தியூர் செல்வராஜ், சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக காங்., முன்னாள் தலைவர் தங்கபாலு பேசுகையில், ''இத்-தேர்தலில் நிற்பது தி.மு.க.,வா, காங்., கட்சியா என்பது பிரச்னை இல்லை. ராகுலே நிற்பதாக நினைத்து, காங்., நிர்வாகிகள் பணி செய்ய வேண்டும். சந்திரகுமார் பெறும் ஓட்டு 'இண்டி' கூட்டணி பெறும் ஓட்டாகவே பார்க்க வேண்டும்,'' என்றார்.தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: இந்த இடைத்தேர்தல், மனிதாபிமானமே இல்லாத மத்திய அரசு, தேர்தல் ஆணையத்தால் வந்துள்ளது. தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் இறந்து, 90 நாட்கள் கூட ஆகாத நிலையில் அவசர அவசரமாக தேர்தலை அறிவித்துள்ளது. இருந்த போதிலும், தேர்தலை நாம் எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். எத்தனையோ இன்னல்களான சூழலில் கூட, மக்கள் பணி செய்-வதற்கு நாம் பின்வாங்கியதில்லை.எனவே, தி.மு.க.,வுடன் இணைந்து, ஆரவாரம் இல்லாமல் மக்-களை சந்தித்து, ஓட்டு சேகரியுங்கள். அல்லது, இளங்கோவன் இறந்த சில நாட்களே ஆகும் முன், இப்பிரசாரம் எப்படி அமைந்-துள்ளது என பேசுவார்கள். மக்களை நேரடியாக சந்தித்து பணி செய்யுங்கள்.இவ்வாறு பேசினார்.இதையடுத்து, பெருந்துறை சாலையை ஒட்டிய பகுதிகளில், செல்-வப்பெருந்தகை ஓட்டு சேகரித்தார்.

