/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'டிரேடு சென்டர்' அமைத்து தரக்கோரி பேட்டியா கூட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : டிச 04, 2025 05:58 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது.
கொங்காலம்மன் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்லதுரை, ஈரோடு டெக்ஸ்டைல்ஸ், கார்மென்ட்ஸ் எக்ஸ்போர்ட்ஸ் சங்க தலைவர் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஈரோடு மாநகரில் போக்கு வரத்து நெரிசலுக்கு தீர்வு காண, ரயில்வே ஸ்டேஷன் - மீனாட்சிசுந்தரனார் சாலையை இணைக்கும் வகையில், 80 அடி சாலையை அமைக்க இடையூறாக இருந்த நிலம், உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி அரசு புறம்போக்கு இடமாக தீர்ப்பாகி உள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்றி, 80 அடி சாலையை விரைந்து திறக்க வேண்டும்.அங்கு, 80 அடி சாலை திட்டத்துக்கான நிலம் தவிர மீதமுள்ள இடத்தில் இடம் ஒதுக்கி, சென்னை நந்தம்பாக்கத்தில் தமிழக அரசு அமைத்துள்ள 'டிரேடு சென்டர்' போல ஈரோட்டிலும் அமைத்து தர வேண்டும்.
ஜி.எஸ்.டி.,யை முறையாக செலுத்தும் வணிகர்களுக்கு, 60 வயதுக்கு மேல் பென்ஷன் வழங்க வேண்டும். ஈரோட்டில் தொழில் உரிமம் வசூலிப்பதை நிறுத்தி வைக்க பரிந்துரைத்துள்ள நிலையில், அதனை விரைவில் அறிவிப்பாக வெளியிட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.