/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மல்லிகை பூ ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,700 சரிவு
/
மல்லிகை பூ ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,700 சரிவு
ADDED : டிச 04, 2025 05:58 AM
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி மற்றும் பவானிசாகர் சுற்று வட்டார பகுதியில் 80க்கும் மேற்பட்ட கிராமங்களில் மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கேரளா மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கோவில் திருவிழாக்கள், முகூர்த்தம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு இங்குள்ள பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
முகூர்த்தம் மற்றும் விசேஷ தினங்களில் ஒரு கிலோ மல்லிகை, ரூ.5,500 முதல் ரூ.6,600 வரை விற்றது. தற்போது பனிப்பொழிவால் மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளது.மேலும் திருமண நிகழ்வு இல்லாததால் பூக்களை வாங்க வியாபாரிகள் முன் வரவில்லை. இதனால் ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.1,700 குறைந்து மல்லிகை பூ, 3,200லிருந்து, 1,500 ரூபாயாக சரிந்தது. முல்லை ரூ.1,400 லிருந்து 900 ரூபாயாக சரிந்தது.

