/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரேஷன் கடைக்கு புதிய கட்டட வசதி செய்து தர வலியுறுத்தல்
/
ரேஷன் கடைக்கு புதிய கட்டட வசதி செய்து தர வலியுறுத்தல்
ரேஷன் கடைக்கு புதிய கட்டட வசதி செய்து தர வலியுறுத்தல்
ரேஷன் கடைக்கு புதிய கட்டட வசதி செய்து தர வலியுறுத்தல்
ADDED : ஜூலை 24, 2025 01:55 AM
பெருந்துறை, பெருந்துறை ஆசிரியர் கூட்டுறவு நகரில் உள்ள ரேஷன் கடைக்கு, புதியதாக கட்டடம் கட்டித்தர கோரி, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமாரை, நேரில் சந்தித்து பொதுமக்கள் மனு அளித்தனர்.
பெருந்துறை ஒன்றியம், பாலப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில், திருவாச்சி ரேஷன் கடையில் இருந்து பிரித்து, ஆசிரியர் கூட்டுறவு நகரில் புதியதாக பகுதி நேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
அந்த கடை வாடகை கட்டடத்தில் இயங்கி வருவதால், அதற்கு பெருந்துறை எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில், புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் எம்.எல்.ஏ., ஜெயகுமாரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.