/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேதபாறை பள்ளத்தின் தரைமட்ட பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
/
வேதபாறை பள்ளத்தின் தரைமட்ட பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
வேதபாறை பள்ளத்தின் தரைமட்ட பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
வேதபாறை பள்ளத்தின் தரைமட்ட பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : அக் 22, 2024 01:09 AM
வேதபாறை பள்ளத்தின் தரைமட்ட
பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்
ஈரோடு, அக். 22-
டி.என்.பாளையம் யூனியன் கணக்கம்பாளையம் கிராமத்தை சேர்ந்த மக்கள் சுப்பிரமணியம் தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வழங்கிய மனுவில் கூறியதாவது: கணக்கம்பாளையம் கிராமத்தில் வேதபாறை பள்ளம் உள்ளது. இதை கடந்து பல கிராமங்கள் உள்ளன. பள்ளத்தில் உள்ள தரைமட்ட பாலத்தை கடந்து செல்ல வேண்டும். இதனால் பகவதி நகர், அதை கடந்த மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.
இப்பள்ளத்தில் சில ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தரைமட்ட பாலம், தற்போது சேதமடைந்துள்ளது. பாலத்தை சீரமைக்க பல்வேறு அதிகாரிகளுக்கு மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. இதனால் இப்பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களும் சிரமப்படுகின்றனர். இந்த பாலத்தை சீரமைப்பதுடன், உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும்.
இதற்கான அடிப்படை பணி நடந்தாலும் மெத்தனமாக நடக்கிறது. விரைவில் தரைமட்ட பாலத்தை சீரமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

