/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புதிய மதிப்பீட்டு வரியை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
/
புதிய மதிப்பீட்டு வரியை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
புதிய மதிப்பீட்டு வரியை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
புதிய மதிப்பீட்டு வரியை மாற்றி அமைக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 01, 2024 11:24 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. ஈரோடு மாவட்ட எலக்ட்ரிக்கல் டிரேடர்ஸ் அசோசியேசன் தலைவர் முத்துசாமி வரவேற்றார். பொருளாளர் முருகானந்தம் அறிக்கை சமர்ப்பித்தார்.
அரிசிக்கு வரி விதிக்கக்கூடாது என கெசட்டில் வெளியிட்டதை, அரசாணையாக அறிவிக்க வேண்டும். நிறுவனங்களின் பெயர் பலகையில் தமிழில் எழுத வகை செய்யும் நடவடிக்கையில், ஏற்கனவே பதிவு செய்த நிறுவனங்களை, பதிவு செய்துள்ளவாறே பெயர் பலகையில் எழுத அனுமதிக்க வேண்டும். வரும் காலங்களில் புதிதாக துவங்கும் நிறுவனங்களை பதிவு செய்யும்போதே தமிழில் பதிவு செய்து, பெயர் பலகையில் எழுதும்படி அரசாணையை மாற்றியமைக்க வேண்டும்.
பி.எஸ்.பார்க் பகுதியில் போக்கவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால், குறுகிய சாலையில் நடைபாதை அமைப்பதை கைவிட வேண்டும். வ.உ.சி., பூங்காவில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை, ஏற்கனவே செயல்பட்டு வந்த ஆர்.கே.வி., சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வளாக கடைகளில் ஒதுக்கீடு செய்து செயல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு, புதிய மதிப்பீட்டு வரியை அமல்படுத்தி உள்ளது. இதன்படி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடம் கொள்முதல் செய்தால், டெலிவரி செய்யப்பட்ட, 45 நாட்களுக்குள் பணம் செலுத்த வேண்டும்.
வரும் மார்ச், 31க்குள் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான அனைத்து நிலுவை தொகையையும் செலுத்த வேண்டும் அல்லது நிலுவையில் உள்ள பணம் வருமானமாக கருத்தப்பட்டு வரி விதிக்கப்படும் என்ற அறிவிப்பால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, இந்த அறிவிப்பை மத்திய அரசு மாற்றி அறிவிக்க வேண்டும், என தீர்மானம் நிறைவேற்றினர்.
பொதுச் செயலாளர் ரவிசந்திரன் நன்றி கூறினார்.