/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'தேசிய அளவில் வரி செலுத்துவோர் அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தல்'
/
'தேசிய அளவில் வரி செலுத்துவோர் அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தல்'
'தேசிய அளவில் வரி செலுத்துவோர் அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தல்'
'தேசிய அளவில் வரி செலுத்துவோர் அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தல்'
ADDED : மார் 12, 2024 04:47 AM
ஈரோடு: 'உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய அளவில் வரி செலுத்துவோர் சங்க அமைப்பை ஏற்படுத்தி, அச்சங்க கருத்துக்களின்படி மத்திய, மாநில அரசுகள் மானியங்களை அறிவிக்க வேண்டும்' என, ஈரோடு வரி செலுத்துவோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அச்சங்க கூட்டம் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் செல்வராஜ் முன்னிலை வகித்தார். துணை செயலாளர் சக்திவேல் வரவேற்றார். செயலாளர் பாரதி செயல் அறிக்கை, தீர்மானங்களை முன்மொழிந்தார். ஆசிரியர் ஈஸ்வரன், அசோகபுரம் முருகேஸ் தீர்மானங்களை படித்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தேசிய அளவில் வரி செலுத்துவோர் சங்க அமைப்பை ஏற்படுத்தி, அச்சங்க கருத்துக்களின்படி மத்திய, மாநில அரசுகள் மானியங்களை அறிவிக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சம்பளம், சலுகைகள் வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தேர்தலின்போது அரசியல் கட்சிகள் மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றாத கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில், 2,400 சதுரஅடி உள்ள வீடுகளுக்கு மட்டும் கட்டட அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை வரவேற்கிறோம்.
தமிழக அரசு வீடு, கட்டடங்களை சுற்றி விடப்படும் காலி இடங்களுக்கும், காலி இட வரி விதிக்கும் உத்தேச உத்தரவை வாபஸ் பெற வேண்டும். சொத்து பெயர் மாற்றத்துக்கு விண்ணப்பிக்கும்போது பாதாள சாக்கடைக்கு இணைப்பில்லாமலேயே, டெபாசிட் கேட்பதை ரத்து செய்ய வேண்டும். ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் ஒரு கட்டடத்துக்கு கழிவு நீர் செல்லும் பாதாள சாக்கடைக்கு, ஒரு இணைப்புக்கு ஒரு கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றினர்.

