ADDED : ஜூலை 07, 2026 05:32 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; நாம் தமிழர் கட்சி அந்தியூர் சட்டசபை தொகுதி நிர்வாகி திருமூர்த்தி தலைமையிலான மக்கள், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், மனு வழங்கி கூறியதாவது:
அந்தியூர் சட்டசபை தொகுதி வெள்ளித்திருப்பூர் பஞ்., குருமனுார் காடு என்ற கிராமத்தில், 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதிக்குள் இக்கிராமம் அமைந்துள்ளது. நான்காண்டுக்கு முன் மெட்டல் சாலை அமைத்தனர். தற்போது குண்டும், குழியுமாகி உள்ளது. சாலையில் யானைகள் நடமாட்டம் உள்ளது. யானைகள் வரும்போது மக்களால் வேகமாக திரும்ப செல்லக்கூட முடியாத அவலம் தொடர்கிறது.
எனவே குருமனுார் காடுக்கு தார்ச்சாலை வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு கூறினர்.
