ADDED : ஜூலை 07, 2026 05:33 AM
அ நிறம் | அளவு
ஈரோடு; ஈரோடு, முனிசிபல் சத்திரம், கங்காதேவி எல்லை காளியம்மன், 18ம் படி கருப்பண்ண சுவாமி கோவில் பூசாரி ஜான்வி உட்பட சிலர், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், மனு வழங்கி கூறியதாவது:
திருநங்கைகள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாக முனிசிபல் சத்திரம், பழைய ரயில்வே சாலையில் உள்ள இக்கோ-விலில் வழிபாடு, பூஜை நடத்தி வருகிறோம். கோவில் கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. கூரைப்பகுதி பலவீனமாக உள்ளது. மக்கள் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்-வாகம் கோவிலை சீரமைத்து, வழிபாடு தொடர்ந்து நடக்க உதவ வேண்டும். இவ்வாறு கூறினர்.
