தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இலவச மனை எப்போது கிடைக்கும்?

இலவச மனை எப்போது கிடைக்கும்?

இலவச மனை எப்போது கிடைக்கும்?


ADDED : ஜூலை 07, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு;தாயகம் திரும்பிய மக்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் துரைராஜ், நிர்வாகிகள், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கி கூறியது:

தாயகம் திரும்பிய குடும்பங்களுக்கும், அரச்-சலுார் கிராமத்தில் வாஞ்சிநாதன் குடியிருப்பு மக்-களுக்கும் வடுகப்பட்டி கிராமத்தில், 250 வீட்டு-மனை இடம் தேர்வு செய்து, அனைத்து வேலை-களும் முடியும் நிலை வந்தது. சட்டசபை தேர்தல் வந்ததால், அப்பணி நிறுத்தப்பட்டது. இதனால் தேர்தல் முடிந்த பிறகு, உத்தேச கோரிக்கையை முடித்து பட்டா வழங்க ஆணை தருகிறோம் என ஈரோடு ஆர்.டி.ஓ., உட்பட அதிகாரிகள் தெரிவித்-தனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்-கப்படவில்லை. மறுசர்வே செய்து, இடத்தை தேர்வு செய்து வழங்கும் பணி நடக்கவில்லை. மொடக்குறிச்சி தாசில்தாரிடம் கேட்டால், கலெக்டர் அலுவலகத்தில் கடிதம் பெற்றுத்தரும்-படி கோருகின்றனர். முறையான கடிதங்களை வழங்கி, விரைவாக எங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us