/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பள்ளி சீருடை தயாரிப்பை முழுமையாக விசைத்தறிக்கு வழங்க வலியுறுத்தல்
/
பள்ளி சீருடை தயாரிப்பை முழுமையாக விசைத்தறிக்கு வழங்க வலியுறுத்தல்
பள்ளி சீருடை தயாரிப்பை முழுமையாக விசைத்தறிக்கு வழங்க வலியுறுத்தல்
பள்ளி சீருடை தயாரிப்பை முழுமையாக விசைத்தறிக்கு வழங்க வலியுறுத்தல்
ADDED : ஜன 16, 2024 10:33 AM
ஈரோடு: பள்ளி சீருடை உற்பத்தியை, தேர்தல் வாக்குறுதிப்படி, முழுமையாக விசைத்தறிக்கு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுபற்றி தமிழ்நாடு விசைத்தறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அமைப்பு செயலாளர் கந்தவேல் கூறியதாவது:
பவர் லுாம் உட்பட பல்வேறு பிற ரக துணி உற்பத்தி இயந்திரங்களின் வருகையால், விசைத்தறி கடுமையாக பாதித்துள்ளது. இதனால் விசைத்தறி உரிமையாளர், தொழிலாளர்கள் பாதிக்கின்றனர். அரசு வழங்கும் பொங்கல் இலவச வேட்டி, சேலை, பள்ளி சீருடையில், 96 லட்சம் மீட்டர் மட்டுமே, விசைத்தறியாளர்களுக்கு கை கொடுத்து வருகிறது.
இதை தி.மு.க., உணர்ந்ததால், தனது தேர்தல் அறிக்கையில் பள்ளி சீருடை உற்பத்தியை முழுமையாக விசைத்தறிக்கு வழங்கப்படும் என அறிவித்தனர்.
தற்போது இலவச வேட்டி, சேலை தயாரிப்பு முடிந்து, விசைத்தறிகள் இயக்கமின்றி, தொழிலாளர்கள் வேலையின்றி உள்ளனர். இச்சூழலில் பள்ளி சீருடை தயாரிப்பை வழங்கினால், விசைத்தறியாளர்களுக்கு பயனுடையதாக அமையும்.
கடந்தாண்டு பள்ளி சீருடை உற்பத்திக்கு, 387 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது.
இந்தாண்டும் இதைவிட கூடுதலான தொகைக்கு பள்ளி சீருடை உற்பத்தியாகிறது. ஆட்டோ லுாமில் உற்பத்தியாவதைவிட, விசைத்தறியில் உற்பத்தி செய்தால், மீட்டருக்கு, 4 ரூபாய் உற்பத்தி செலவு குறைவு. அரசுக்கும் பல கோடி ரூபாய் மீதமாகும். விசைத்தறிக்கு ஆண்டு முழுவதும் குறைந்த பட்ச வேலை கிடைக்கும்.
இவ்வாறு கூறினார்.