ADDED : நவ 10, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, நவ. 10-
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக துறை மாநில ஆணையர் லால்வேனா, ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பெருந்துறை அருகே பால் சார்ந்த பொருட்கள் தயாரிப்பு நிறுவனம், மருந்து சாதனங்கள், மருத்துவ கையுறைகள் தயாரிப்பு நிறுவனத்தை ஆய்வு செய்தார்.
அங்கு தயாரிக்கப்படும் பால் பொருட்களின் முறை, அவற்றின் சுகாதாரம், மருத்துவ கையுறைகளின் தரத்தை சோதனையிட்டார். பின், கோபி அருகே கொளப்பலுாரில் செயல்படும் மருந்து சாதனங்களான ஊசி தயாரிப்பு நிறுவனத்தில் ஆய்வு செய்தார்.