/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அத்திக்கடவு திட்ட குளங்களில் ஆய்வு
/
அத்திக்கடவு திட்ட குளங்களில் ஆய்வு
ADDED : செப் 13, 2025 01:43 AM
ஈரோடு, பெருந்துறை பகுதியில் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ், குட்டைகளுக்கு நீரேற்று முறையில் வழங்கப்பட்ட நீர் திட்டப்பணிகளை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். இந்தாண்டில் இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் மொத்தமுள்ள, 359 குளங்களில், 332 குளங்களுக்கு நீர் சென்றடைந்துள்ளது. 27 குளங்களுக்கு நீர் செல்லும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இதன்படி துடுப்பதி பகுதியில் துலுக்கம்பாளையம் குட்டை எண் - 28 பட்டக்குட்டையையும், குட்டை எண் - 34 கங்கரசம்புதுார் குட்டை, பாலக்கரை பகுதி குட்டை எண் - 7 காமாட்சியம்மன் கோவில் குட்டை போன்றவைகளை பார்வையிட்டு, தண்ணீர் குறைவாக வருவதற்கான காரணத்தை கண்டறிய, நீர் வளத்துறை மற்றும் எல் அன்ட் டி., அலுவலர்களை அமைச்சர் அறிவுறுத்தினார்.
சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரி அருகே உள்ள குளத்துக்கு புதிதாக நீரேற்று நிலையம் மூலம் தண்ணீர் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். பின், தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடத்தி, உரிய நேரங்களில் தண்ணீர் தடையின்றி செல்ல நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். கலெக்டர் கந்தசாமி, நீர் வளத்துறை செயற்பொறியாளர் மோகனசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.