/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தாராபுரத்தில் மீண்டும் ரேஷன் கடைகளில் ஆய்வு
/
தாராபுரத்தில் மீண்டும் ரேஷன் கடைகளில் ஆய்வு
ADDED : ஜூலை 24, 2025 02:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதி ரேஷன் கடைகளில், ரேஷன் அரிசி தொடர்பாக, பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில், நேற்று காலை வழக்கம் போல் ரேஷன் கடைகள் இயங்கியது.
அப்போது, ரேஷன் கடை எண் 3ல், ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், அங்கு வந்த பெண்களிடம், சரியான எடையில் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறதா என விசாரித்தார். இரண்டாவது நாளாக, ஆய்வு மேற்கொண்டது, தாராபுரம் பகுதி ரேஷன் கடை ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.