/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோனில் ஆய்வு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர குடோனில் ஆய்வு
ADDED : டிச 24, 2024 01:58 AM
ஈரோடு, டிச. 24--
ஈரோடு மீனாட்சிசுந்தரனார் சாலையில் உள்ள, ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில், தேர்தல் ஆணைய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர கிடங்கு உள்ளது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, இங்கு நேற்று ஆய்வு செய்தார்.
இதில் தி.மு.க., - மற்றும் அ.தி.மு.க., உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு கட்சியினரும் பங்கேற்றனர். காலாண்டுக்கு ஒருமுறை 'சீல்' வைக்கப்பட்டிருக்கும் இக்கிடங்கில் இருப்பில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வி.வி.பேட் போன்றவற்றை, இயல்பு தணிக்கைக்கு உட்படுத்துவர். அதன்படி ஆய்வு நேற்று மேற்கொள்ளப்பட்டு, பாதுகாப்பை உறுதி செய்தனர். பின் மீண்டும் கிடங்கிற்கு 'சீல்' வைக்கப்பட்டது. தேர்தல் பிரிவு தாசில்தார் சிவசங்கர் உடனிருந்தார்.