/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மலைப்பகுதி சாலை, குடிநீர் வசதிக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தல்
/
மலைப்பகுதி சாலை, குடிநீர் வசதிக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தல்
மலைப்பகுதி சாலை, குடிநீர் வசதிக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தல்
மலைப்பகுதி சாலை, குடிநீர் வசதிக்கு முன்னுரிமை வழங்க அறிவுறுத்தல்
ADDED : ஜூலை 08, 2025 01:36 AM
ஈரோடு :ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர் மட்டக்குழு கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நேற்று நடந்தது.
இதில், கத்திரிமலையில் மின் இணைப்பு வழங்குதல், சாலை தொடர்பு இல்லாத குக்கிராமங்களுக்கு சாலை வசதி அமைத்தல், மலைப்பகுதி சாலை அமைத்தல், ரேஷன் கடை, சமுதாய கூடம் அமைக்க போதிய இடவசதி இல்லாத பகுதிகளில் மாற்றிடம் தேர்வு செய்தல், குடிநீர் பணி, ஸ்மார்ட் வகுப்பறை, தெருவிளக்கு பணிகளுக்கு முன்னுரிமை வழங்க யோசனை தெரிவிக்கப்பட்டது.
சமூக நலத்துறை மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்னைகளுக்கு தீர்வு காண  அனைத்து நிறுவனங்களிலும் உள்ளக புகார் குழு அமைத்தல் என, ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து உத்தரவிடப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சாந்தகுமார், மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், வனத்துறை துணை இயக்குனர் குலால் யோகேஷ் விலாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.