/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காப்பீடு பிரச்னை: ஓய்வூதியருக்கு அழைப்பு
/
காப்பீடு பிரச்னை: ஓய்வூதியருக்கு அழைப்பு
ADDED : மார் 02, 2024 03:30 AM
ஈரோடு: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க, ஈரோடு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் அரசு பணியாற்றி ஓய்வு பெற்ற ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர் என, 20,046 பேர் உள்ளனர். இவர்களிடம் மருத்துவ காப்பீடு தொகையாக மாதம், 497 ரூபாய் தமிழக அரசு பிடித்தம் செய்கிறது. இதில் நான்கு ஆண்டுகளுக்கு நான்கு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை செலவுத்தொகை பெறலாம். ஆனால், இந்த உத்தரவை தமிழக அரசும், சம்மந்தப்பட்ட காப்பீடு நிறுவனமும், 5 சதவீதம் கூட நடைமுறைப்படுத்துவதில்லை. இதுகுறித்து கடந்த மாதம் நடந்த ஓய்வூதியர் குறைதீர் கூட்டத்தில் முறையிடப்பட்டது. இதில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா, மார்ச் 5 மற்றும் 15ல் சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்து, அதற்கு முன் பிரச்னைகளுக்கு தீர்வு காண காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். எனவே ஓய்வூதியர் இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட சங்க அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

