/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
திருப்பூரில் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகம்
/
திருப்பூரில் ஒருங்கிணைந்த வணிக வரித்துறை வளாகம்
ADDED : ஜூன் 04, 2025 01:05 AM
திருப்பூர், திருப்பூர் வணிக வரி கோட்டம், 2023 ஜூனில் உருவாக்கப்பட்டது. மூன்று மண்டலங்கள், 21 சரகங்களுடன், வணிக வரி கோட்டம் செயல்பட்டு வருகிறது. மொத்தம், 75 ஆயிரம் வர்த்தகர்கள் உள்ளனர்.
வணிக வரி கோட்டத்தின் தலைமையகம், இணை கமிஷனர் (நிர்வாகம்), இணை கமிஷனர் (நுண்ணறிவு பிரிவு) அலுவலகங்களும், திருப்பூர் - 3 வது மண்டல அலுவலகங்களுடன் அவிநாசி - திருப்பூர் ரோட்டிலுள்ள ஏ.இ.பி.சி.,க்கு சொந்தமான கட்டடத்தில் இயங்குகிறது. திருப்பூர் வணிக வரி மண்டலம் - 2 மற்றும் ஆறு சரக அலுவலகங்கள், குமார் நகரில் தனியார் கட்டடத்தில் இயங்குகிறது.
திருப்பூர் மண்டலம் - 1 மற்றும் எட்டு சரக அலுவலகங்கள் மட்டும், குமரன் ரோட்டில், சொந்த கட்டத்தில் இயங்கிவருகிறது. சட்டசபை மானிய கோரிக்கையில், திருப்பூரில் ஒருங்கிணைந்த வணிக வரி வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால், தாராபுரம் ரோட்டில், கோவில் வழி பஸ்ஸ்டாண்ட் அருகே, ஒருங்கிணைந்த வணிக வரி வளாகம் அமைக்க, 3.5 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
வருவாய்த்துறைக்கு சொந்தமான இந்நிலத்தை, வணிக வரித்துறைக்கு மாறுதல் செய்வதற்கான ஒப்புதல் கேட்டு, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரசு அனுமதி கிடைத்த உடன், கட்டுமான பணிகளை துவக்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், திருப்பூர் வணிக வரி மண்டலம் -3 க்கு உட்பட்ட காங்கயம், வெள்ளகோவில் சரகங்களுக்கு, சிவன்மலையிலும், பல்லடம் - 1, 2 சரகங்களுக்கு, பல்லடத்திலும்; உடுமலை வடக்கு மற்றும் தெற்கு சரகங்களுக்கு, உடுமலை - பழனி ரோட்டிலும், சொந்த கட்டடம் கட்டப்பட உள்ளது.