ADDED : ஆக 30, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
பவானி:அம்மாபேட்டை
யூனியன் ஊமாரெட்டியூர் அரசு துவக்கப் பள்ளி, குருவரெட்டியூர் அரசு
ஆரம்ப சுகாதார நிலைய வளாக பகுதியில், தமிழக அரசு மாற்று திறனாளிகள்
நலத்துறை, வட்டார அளவிலான ஒருங்கிணைந்த மறு வாழ்வு ஓரிட சேவை மையம்
(விழுதுகள்) திறப்பு விழா நேற்று நடந்தது. கோபி ஆர்.டி.ஒ.,சிந்துஜா,
ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு
அளிக்கப்படும் சிகிச்சை முறை, பிசியோ தெரபி அணுகுமுறை குறித்த
ஆய்வுகளை ஆர்.டி.ஓ., மேற்கொண்டார்.
இதேபோல் பவானிசாகர் அரசு
மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
சார்பில் ஒருங்கிணைந்த ஓரிட சேவை மையத்தை, அமைச்சர் செங்கோட்டையன்
திறந்து வைத்தார்.
