ADDED : ஆக 30, 2026 05:47 AM
அ நிறம் | அளவு
ஈரோடு,:ஈரோடு
மாவட்டத்தில் சில தினங்களாக பரவலாக லேசான மழை பெய்கிறது.
எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. எனினும் இம்மழையால் புற்கள்
புதிதாக முளைக்கும் என்பதால் கால்நடை வளர்ப்போர் சற்று நிம்மதி
பெருமூச்சு விட்டுள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று
முன்தினம் அம்மாபேட்டையில், 8.60 மி.மீ மழை பெய்தது. வரட்டுபள்ளம்
அணையில், 2 மி.மீ மழை பெய்தது. மாவட்டத்தின் பிற பகுதிகளில் மழை
பொழிவு இல்லை.
