sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வேளாண் கண்காட்சியை பார்வையிட ஆர்வம்

/

வேளாண் கண்காட்சியை பார்வையிட ஆர்வம்

வேளாண் கண்காட்சியை பார்வையிட ஆர்வம்

வேளாண் கண்காட்சியை பார்வையிட ஆர்வம்


ADDED : ஜூன் 13, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 13, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே, வேளாண் துறை சார்பில் கடந்த, வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, நேற்று முன்தினம் முதல்வர் ஸ்டாலினால் துவக்கி வைக்கப்பட்டது.

இரண்டாவது நாளாக நேற்று நடந்த கண்காட்சிக்கு, காலை முதலே விவசாயிகள் குடும்பத்துடனும் வர துவங்கினர். கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பல்வேறு நவீன இயந்திரங்களை பார்வையிட்டதுடன், செயல்பாடுகளை கேட்டறிந்தனர்.

நெல், மஞ்சள், வாழை, முருங்கை உட்பட பல்வேறு பயிர்களில் குறைந்த நாட்களில் அதிக மகசூல் பெறும் ரகங்களை காட்சிப்படுத்தி, விதை விற்பனை செய்தனர்.

பட்டன் காளான், சிப்பி களான் என காளான் வளர்ப்பு, தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் - மஹராஷ்டிராவின் கோவை களை மூலம் சின்ன வெங்காயம், பெரிய வெங்காய உற்பத்தி உயர்வுக்கான தொழில் நுட்ப விளக்க திடல், 1,000 காய்ச்சி தென்னை மரம், நீரா பான உற்பத்தி மற்றும், 60க்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் அவர்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி இருந்தனர்.

இவற்றை பார்வையிடும் மக்கள், அவற்றின் விதைகள், செயல்முறை விளக்க நோட்டீஸ்களை பெறுவதுடன், செடிகள், நாற்றுக்களையும் வாங்கி சென்றனர். பல இடங்களில் இலவச மரக்கன்று, செடி வழங்கினர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு பஸ்களில் விவசாயிகள் அழைத்து வரப்பட்டு, கண்காட்சி, கருத்தரங்கை பார்வையிட செய்துவிட்டு, அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கினர். மீண்டும் அரசு பஸ் மூலம் சொந்த ஊர்களுக்கு அழைத்து சென்றனர். இன்றிரவுடன் நிறைவு

பெறுகிறது.






      Dinamalar
      Follow us