/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பெருந்துறையில் தங்கி பணிபுரிந்த வங்காளதேசத்தினரிடம் விசாரணை
/
பெருந்துறையில் தங்கி பணிபுரிந்த வங்காளதேசத்தினரிடம் விசாரணை
பெருந்துறையில் தங்கி பணிபுரிந்த வங்காளதேசத்தினரிடம் விசாரணை
பெருந்துறையில் தங்கி பணிபுரிந்த வங்காளதேசத்தினரிடம் விசாரணை
ADDED : அக் 10, 2024 03:32 AM
பெருந்துறை: பெருந்துறையில் தங்கி, பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும், வங்காளதேச நாட்டை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பணிக்கம்பாளையம், கிருஷ்-ணம்பாளையம் பகுதியில் அதிகளவில், வடமாநில தொழிலா-ளர்கள் பல்வேறு நிறுவனங்களில் தங்கி பணிபுரிந்து வருகின்-றனர். இவர்களில் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் என்ற பெயரில், வங்காளதேசத்திலிருந்து அகதிகளாக வெளியேறி, தமி-ழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஊடுருவி தங்கி இருப்பதாக, தமிழக காவல் துறைக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் சென்-றன. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு, பெருந்துறை, பணிக்கம்பாளையம் பகுதியில் பெருந்துறை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் தங்கி இருந்தவர்கள் வைத்-திருந்த ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் சோதனை செய்தனர். அதில், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் பல்-வேறு அடையாள அட்டைகளுடன் தங்கியிருந்த, வங்காளதே-சத்தை சேர்ந்த ஏழு அகதிகளை போலீஸ் ஸ்டேஷன் அழைத்து வந்து, விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

