/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு நேர்காணல்
/
அங்கன்வாடி ஊழியர் பணிக்கு நேர்காணல்
ADDED : ஜூன் 10, 2025 01:10 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடம், 139 காலியாக உள்ளது. இதற்காக அந்தந்த யூனியன் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் துறை மூலம் விண்ணப்பம் பெறப்பட்டது. 4,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வரப்பெற்றதில், 2,575 விண்ணப்பம் தகுதியானதாக ஏற்கப்பட்டது.
இவர்களுக்கு கடந்த மாதம், 26ம் தேதி முதல் யூனியன் வாரியாக நேர்காணல் நடந்தது. ஈரோடு மாநகராட்சி மற்றும் யூனியன் பகுதி நேர்காணல், ஈரோடு காமராஜர் வீதி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நேற்று நடந்தது. நேற்று, 145 பேர் அழைக்கப்பட்டனர். இன்றும் நேர்காணல் நடக்கவுள்ளது. தகுதி, நேர்காணல் முடிவு குறித்து அரசு அறிவிக்கும் என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.