/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அன்னதானம் செய்வோருக்கு மிரட்டல்:தீர்வு காணக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
/
அன்னதானம் செய்வோருக்கு மிரட்டல்:தீர்வு காணக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
அன்னதானம் செய்வோருக்கு மிரட்டல்:தீர்வு காணக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
அன்னதானம் செய்வோருக்கு மிரட்டல்:தீர்வு காணக்கோரி எஸ்.பி.,யிடம் மனு
ADDED : மார் 05, 2024 01:50 AM
ஈரோடு;ஈரோடு, லக்காபுரம், பரிசல்துறை ரோடு, சுப்பிரமணியர் அன்னதான அறக்கட்டளை தலைவர் ஜிஜேந்திரன் தலைமையிலான பக்தர்கள், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் செண்பகமலை குமார சுப்ரமணியர் கோவில் அமைந்துள்ளது. இது அறநிலையத்துறைக்கு உட்பட்டது. கோவிலில் அன்னதானம் செய்கிறோம். அறக்கட்டளை மூலம் பல்வேறு மக்கள் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம்.
இதை தடுக்கும் விதமாக ஒரு தனி நபர், தன் சமூகத்தை சேர்ந்த சிலரை சேர்த்து கொண்டு, வழிபாடு செய்ய இடையூறாக இருப்பதுடன், மிரட்டில் ஈடுபட்டு வருகிறார். பண வசூலிலும் ஈடுபடுகிறார். அன்னதான அறக்கட்டளை உறுப்பினர்களை தகாத வார்த்தை பேசி, உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்துகிறார்.
இதுகுறித்து ஏற்கனவே இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளோம். அன்னதான அறக்கட்டளை நற்பெயரை கெடுக்கும் வகையில், சமூக வலைதளத்தில் தவறான பதிவை சிலர் மூலம் பதிவு செய்து வருகிறார்.இப்பிரச்னையில் போலீசார் தலையிட்டு உரிய தீர்வை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.