/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல்; அச்சத்தில் மக்கள் மறியல்
/
ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல்; அச்சத்தில் மக்கள் மறியல்
ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல்; அச்சத்தில் மக்கள் மறியல்
ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டல்; அச்சத்தில் மக்கள் மறியல்
ADDED : நவ 08, 2024 07:30 AM
டி.என்.பாளையம்: டி.என்.பாளையத்தை அடுத்த டி.ஜி.புதுார் அருகேயுள்ள சென்றாயம்பாளையம் மாதேஸ்வரன் கோவில் பகுதியில், 2012ல் அ.தி.மு.க., ஆட்சியில். கொடிவேரி பேரூராட்சிக்குட்பட்ட மக்களுக்கு வருவாய் துறை மூலம் பட்டா வழங்கப்பட்டது.
இதில் பட்டா இல்லாதவர்களுக்கு அளவீடு செய்து பட்டா வழங்கவும், சில மாதங்களாக வெளியூரை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து அமைத்த குடிசைகளை அகற்றவும், ஈரோடு கலெக்டர் அலுவலகம், கோபி சப்-கலெக்டர் ஆகியோரிடம், சென்றாயம்பாளையம் கிராம மக்கள் அடுத்தடுத்து மனு அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, கொடிவேரி மேடு வீரசின்னானுார் பிரிவில் நேற்று மாலை, சாலை மறியலில் ஈடுபட்டனர். வாணிப்புத்துார் ஆர்.ஐ., ஜெயக்குமார், பங்களாப்புதுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்கள், தங்களை மிரட்டுவதால் அச்சமடைந்துள்ளோம் என்று, மறியலில் ஈடுபட்ட பெண்கள் வேதனைப்பட்டனர். அதிகாரிகள் சமாதானத்தை தொடர்ந்து, அரை மணி நேரத்தில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.