/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்; தாக்குதலுக்கு ஆளான வாலிபர் மனு
/
வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்; தாக்குதலுக்கு ஆளான வாலிபர் மனு
வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்; தாக்குதலுக்கு ஆளான வாலிபர் மனு
வழக்கை வாபஸ் பெறுமாறு மிரட்டல்; தாக்குதலுக்கு ஆளான வாலிபர் மனு
ADDED : ஜூலை 16, 2024 01:34 AM
ஈரோடு: நாமக்கல், வீரணம்பாளையம் அருந்ததியர் வீதியை சேர்ந்தவர் கவுரிசங்கர், 36; ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பவானியில் கார்மெண்ட் தொழில் செய்ய, ஒரு கடையை லீசுக்கு எடுத்து இருந்தேன்.
கடந்த, 4ம் இரவு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தும், என்னை கடையை காலி செய்ய வேண்டும் என்றும், ஆறு பேர் கும்பல் மிரட்டியது. ஜாதி பெயரை கூறி கம்பியால் தாக்கி, கடையை காலி செய்யா-விட்டால் கொலை செய்வதாக எச்சரித்தனர். காயமடைந்ததால் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தேன். இதுகு-றித்த புகாரில், வன்கொடுமை உள்ளிட்ட 10 பிரிவுகளில் பவானி போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆனால், யாரையும் கைது செய்ய-வில்லை. இந்நிலையில் என்னை தாக்கிய சித்தேஸ்வரன், வாஞ்சி-நாதன், சந்தோஷ் உள்ளிட்ட ஆறு பேர் வழக்கை வாபஸ் பெறு-மாறு மிரட்டி வருகின்றனர். சட்டரீதியான பாதுகாப்பு வழங்கி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி-வித்துள்ளனர்.