ADDED : ஆக 25, 2026 05:43 AM
பவானிசாகர்; மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் வகை-யிலும், வறட்சியை தாக்குப்பிடித்து பயிர்கள் வளரும் வகையிலும், மெத்தலோ பாக்டீரியம் திரவ உயிர் உரத்தை, இலை வழியே தெளிக்கும் வகையில், பவானிசாகரில் செயல்படும் தமிழ்-நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அறி-முகம் செய்துள்ளது.
இதுகுறித்து பவானிசாகர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் யசோதா தலைமையில், புன்செய் புளியம்பட்டி அருகே புங்கம்பள்ளி கிரா-மத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல் விளக்கம் நேற்று அளிக்கப்பட்டது.பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய உளவியல் துறை பேராசிரியர் வடிவேல் விவசா-யிகள் மத்தியில் விளக்கம் அளித்தபோது, 'எல்--நினோ காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்படும் விவசாய பயிர்களை காக்கும் வகையிலும், மண்ணில் ஈரப்பதத்தை தக்க வைக்க மானாவாரி நிலங்கள் அதிகம் உள்ள பவானிசாகர் வட்டாரத்தில் முதன்முறையாக இந்த உயிர் உரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த உயிர் உரத்தை இலை வழியே தெளிப்-பதன் மூலம், மண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்-படுகிறது. ஒரு லிட்டர் தண்ணீரில், 10 மில்லி உயிர் உரத்தை கலந்து பயன்படுத்தலாம். இதனால் மானாவாரி பயிர்களான நிலக்கடலை, சோளம், எள், துவரை உள்ளிட்ட பயிர்கள், மேலும் கருகாமல் வளரும் சூழ்நிலை ஏற்படும். இந்த உயிர் உரத்தை தெளிப்பதன் மூலம் வறட்சியிலி-ருந்து பயிர்களை பாதுகாக்கலாம்' என்று தெரி-வித்தார்.
