ADDED : ஆக 25, 2026 05:43 AM

அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர் அருகே நகலுார் ஊராட்சிக்கு உட்பட்ட கொண்டையம்பாளையத்தில் நுாற்றுக்கும் அதிக-மான குடும்பத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக, ஆற்று குடிநீர் வினி-யோகம் செய்வதில்லை. ஊராட்சியில் மனு அளித்தும் நடவடிக்கை இல்லாததால், 50க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள், அந்தியூர் யூனியன் அலுவலகம் முன், நேற்று காலை சாலை மறி-யலில் ஈடுபட்டனர்.
அந்தியூர் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு, பி.டி.ஓ., மகேஷ் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர் வினியோகம் செய்ய ஏற்பாடு செய்வதாக உறுதி கூறவே மறியலை கைவிட்டனர். மறி-யலால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்-கப்பட்டது.
