/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகம்

ADDED : செப் 25, 2024 07:24 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து முதன்மை வேளாண் விரிவாக்க மையங்களிலும், பணமில்லா பரிவர்த்தனை முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி மாவட்ட வேளாண் இணை இயக்குனர் வெங்கடேசன், வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழக வேளாண் துறையில், மின்னணு பண பரிவர்த்தனை வசதி துவங்கப்பட்டுள்ளது. இதன்படி ஈரோடு மாவட்டத்தில் ஏ.டி.எம்., கார்டுகளை கொண்டு பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலமும், கூகுள் பே, போன் பே, பீம், பேடிஎம் மூலம் வேளாண் துறையில் மின்னணு பண பரிவர்த்தனை செய்யும் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
வட்டார வேளாண் விரிவாக்க மையங்களில் இனி அனைத்து இடுபொருட்களையும் விவசாயிகள் ஏ.டி.எம்., கார்டு மற்றும் யு.பி.ஐ., அடையாள எண் மூலம் எளிதில் பெற முடியும். முதன்மை விரிவாக்க மையங்களில் பணமில்லா பரிவர்த்தனை, 100 சதவீதம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பண பரிவர்த்தனை செய்ய வாய்ப்பில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.