/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடிட்டர் வீட்டு திருட்டில் ஈடுபட்ட கர்நாடக வாலிபரிடம் விசாரணை
/
ஆடிட்டர் வீட்டு திருட்டில் ஈடுபட்ட கர்நாடக வாலிபரிடம் விசாரணை
ஆடிட்டர் வீட்டு திருட்டில் ஈடுபட்ட கர்நாடக வாலிபரிடம் விசாரணை
ஆடிட்டர் வீட்டு திருட்டில் ஈடுபட்ட கர்நாடக வாலிபரிடம் விசாரணை
ADDED : ஆக 22, 2024 03:41 AM
ஈரோடு: ஈரோடு ஆடிட்டர் வீட்டில் நடந்த, திருட்டுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட கர்நாடகா மாநில நபரை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
ஈரோடு, சூரம்பட்டி என்.ஜி.ஜி.ஓ., காலனி 7வது வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 69, ஆடிட்டர். இவர் மனைவி சாதனா. இருவரும் கடந்த ஜூன், 8 காலை வீட்டை பூட்டி விட்டு, தேனியில் நடந்த உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றனர். அன்று இரவு இவரது வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள், 235 பவுன் நகை, ரூ.48 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றனர். ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஐந்து பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 132 பவுன் தங்க நகை, ஒரு கார், 76 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
திருட்டில் மூளையாக செயல்பட்ட, கர்நாடகா மாநிலம் ராம் நகர் மகடி மாரனஹள்ளி பாலவர்குடுப்பி, நாகமவானியை சேர்ந்த நரசிம்மா (எ) ரெட்டியை, 39, பெங்களூர் போலீசார் மற்றொரு திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர். இதுபற்றி சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிய வந்தது.
நீதிமன்றம் மூலம் அணுகிய போலீசார், ஏழு நாள் கஸ்டடி எடுத்தனர். 20 முதல் 27 வரை விசாரிக்க நீதிமன்றத்தால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஈரோடு ஆடிட்டர் வீட்டு திருட்டு வழக்கில், பெயர் சேர்க்கப்பட்டு இருப்பது குறித்து நரசிம்மாவுக்கு போலீசார் தெரிவித்தனர்.