/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
/
தமிழ் இலக்கிய திறனறி தேர்வு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 23, 2025 01:54 AM
ஈரோடு, தமிழ் மொழி இலக்கிய திறனறி தேர்வுக்கு பிளஸ் 1 மாணவ-ர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்தும் விதமாக பிளஸ் 1 மாணவர்களுக்கு, தமிழ் மொழி இலக்கிய திறனறித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டுக்கான தேர்வு அக்.,11ல் நடக்கவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகள், சி.பி.எஸ்.இ, ஐ.சி.எஸ்.சி பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவ, -மாணவியர் செப்.,4க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்துடன், 50 ரூபாய் தேர்வுக்கட்டணம் சேர்த்து பள்ளி தலைமையாசிரியர் அல்லது பள்ளி முதல்வரிடம் விண்ணப்பிக்கலாம்.
தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெறும், 1,500 பேருக்கு, மாதம், 1,500 ரூபாய் வீதம் இரு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.