/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வக நுட்புநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

ADDED : நவ 10, 2024 01:16 AM
ஆரம்ப சுகாதார நிலையத்தில்
ஆய்வக நுட்புநர் பணியிடம்
விண்ணப்பிக்க அழைப்பு
ஈரோடு, நவ. 10-
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள நான்கு ஆய்வக நுட்புநர் பணியிடங்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. மாத ஊதியம், ரூ.13,500. பணியிடங்களுக்கு பிளஸ் 2ல் தேர்ச்சி பெற்று டிப்ளமோ லேப் டெக்னீசியன் (2 வருடம்) அல்லது மெடிக்கல் லேப் டெக்னாலஜி சான்றிதழ் படிப்பு (ஒரு வருடம்) என, தமிழக அரசால் அங்கரிக்கப்பட்ட பயிற்சி பள்ளியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எக்காரணம் கொண்டும் பணிவரன் முறை அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
தகுதியானவர்கள் கல்வி சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை வரும், 25ம் தேதிக்குள் 'ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இத்தகவலை மாநகராட்சி ஆணையர் மணீஷ் தெரிவித்துள்ளார்.