/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நெல்லுக்கு 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய அழைப்பு
/
நெல்லுக்கு 15ம் தேதிக்குள் காப்பீடு செய்ய அழைப்பு
ADDED : நவ 12, 2024 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லுக்கு 15ம் தேதிக்குள்
காப்பீடு செய்ய அழைப்பு
ஈரோடு, நவ. 12-
பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்துக்கு, காப்பீடு செய்ய, நெல் பயிர் பிர்கா வாரியாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. 29 பிர்கா அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏக்கருக்கு, 573 ரூபாய் வீதம் காப்பீடு கட்டணம் செலுத்த வேண்டும். ஏக்கருக்கு அதிகபட்சம், 38,200 ரூபாய் வரை இழப்பீடு பெறலாம். சம்பா நெல் பயிருக்கு வரும், 15க்குள் காப்பீடு செய்ய வேண்டும்.

