ADDED : ஜூலை 10, 2026 05:36 AM

ஈரோடு:கலை
பண்பாட்டு துறை கோவை மண்டலம் சார்பில், ஈரோடு ஜவகர் சிறுவர் மன்றம்
மூலம் மாவட்ட அளவில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராம நடன கலை
போட்டிகள் வரும், 18ம் தேதி காலை, 9:00 மணி முதல் ஈரோடு, பவானி சாலை,
பி.பெ.அக்ரஹாரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடக்க உள்ளது.
மாவட்ட
அளவில், 5 - 8, 9 - 12, 13 - 16 ஆகிய வயது பிரிவில் மாணவர்களுக்கு கலை
ஆர்வத்தை ஊக்குவிக்கவும், கலை விழிப்புணர்வுக்காக குரலிசை, பரத
நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டி
நடத்தப்படும். முதல், மூன்று இடங்களை பெறும் மாணவர்களுக்கு பரிசு
வழங்கப்படும். மேலும், 9-12, 13-19 வயது பிரிவுகளில் முதலிடம்
பெற்றவர்கள், மாநில கலை போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
கடந்தாண்டுகளில்
போட்டிகளில் முதல் பரிசு வென்றோர், பங்கேற்க அனுமதி இல்லை.
போட்டிக்கு வருவோர், ஆதார் அட்டை நகல், வயது சான்றிதழ், பள்ளி படிப்பு
சான்றிதளுடன் வரும், 18 காலை, 9:00 மணிக்குள் நேரில் பதிவு செய்ய
வேண்டும். மாவட்ட ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை, 99946 61754 என்ற
எண்ணில் தொடர்பு கொண்டு கூடுதல் விபரம் பெறலாம்.
