/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரும் 13ல் மாரத்தான் மாணவ, மாணவியருக்கு அழைப்பு: கலெக்டர்
/
வரும் 13ல் மாரத்தான் மாணவ, மாணவியருக்கு அழைப்பு: கலெக்டர்
வரும் 13ல் மாரத்தான் மாணவ, மாணவியருக்கு அழைப்பு: கலெக்டர்
வரும் 13ல் மாரத்தான் மாணவ, மாணவியருக்கு அழைப்பு: கலெக்டர்
ADDED : டிச 11, 2025 06:17 AM
ஈரோடு: ஈரோட்டில், மாரத்தான் போட்டி நடைபெறுவது குறித்து கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி
குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஈரோட்டில், அறிஞர் அண்ணா மாரத்தான் விளையாட்டு போட்டி டிச.,13 காலை 7:00 மணிக்கு நடைபெற உள்ளது. 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட ஆண்களுக்கு 8 கி.மீ., துாரம், பெண்களுக்கு 5 கி.மீ., துாரம் போட்டி நடக்கிறது. 25 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, 10 கி.மீ., துாரம், பெண்களுக்கு 5 கி.மீ., துாரம் போட்டி நடைபெறுகிறது. மாணவ, மாணவியருக்கு தனித்தனியாக நடத்தப்படும்.வ.உ.சி., பூங்கா மைதானத்தில் இருந்து துவங்கி சூளை, கனிரா-வுத்தர் குளம், தண்ணீர்பந்தல் பாளையம் வரை நடைபெறும் போட்டியில், முதல் மூன்று இடங்களை பிடிப்பவர்களுக்கு 5,000, 3,000, 2,000 ரூபாய் வீதமும், நான்கு முதல் பத்தாம் இடத்தை பிடிப்பவர்களுக்கு, 1,000 ரூபாய் வீதம் பரிசு தொகை வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு கூறியுள்ளார்.