/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
விவசாய மின்சாரத்துக்கு ஜூலைக்குள்ஆவணங்களை சமர்ப்பிக்க அழைப்பு
/
விவசாய மின்சாரத்துக்கு ஜூலைக்குள்ஆவணங்களை சமர்ப்பிக்க அழைப்பு
விவசாய மின்சாரத்துக்கு ஜூலைக்குள்ஆவணங்களை சமர்ப்பிக்க அழைப்பு
விவசாய மின்சாரத்துக்கு ஜூலைக்குள்ஆவணங்களை சமர்ப்பிக்க அழைப்பு
ADDED : ஏப் 20, 2025 01:21 AM
ஈரோடு:-பவானி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்குதலும் பேணுதலும்) ராமசந்திரன், வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது:
கோபி மின்வாரியம் பவானி கோட்டத்துக்கு உட்பட்ட வரதநல்லுார், தாளகுளம், மைலம்பாடி, சன்னியாசிபட்டி, கலிபாவி, பவானி, ஜம்பை, ஓரிச்சேரி, ஊராட்சிகோட்டை, தொட்டிபாளையம், பருவாச்சி, எலவமலை, சின்னபுலியூர், பெரியபுலியூர், சங்கராபாளையம், பர்கூர் வரை உள்ள இம்மின் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் விவசாய மின் இணைப்புக்கு விவசாயிகள் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த, 2000 மார்ச், 1 முதல், 2003 மார்ச், 31 வரை பதிவு செய்த விவசாய விண்ணப்பங்களுக்கு தயார் நிலை பதிவுக்கு பல்வேறு ஆண்டுகளில் நேர்காணல் நடத்தப்பட்டது. உரிய ஆவணங்களுடன் பங்கேற்காதவர்களுக்கான கால அவகாசம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. தயார் நிலை கடிதம் கிடைக்க பெறாத விவசாய விண்ணப்பதாரர்கள், அதற்கான அத்தாட்சியுடன், அந்தந்த பகுதி மின்வாரிய பிரிவு அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.