/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தர்பூசணி, கம்பு, முலாம் பழம் கொள்முதல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அழைப்பு

ADDED : ஜன 02, 2025 01:25 AM
தர்பூசணி, கம்பு, முலாம் பழம் கொள்முதல்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு அழைப்பு
ஈரோடு, ஜன. 2-
பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடம், விவசாயிகளிடம் இருந்து தர்பூசணியை கொள்முதல் செய்ய உள்ளது. தர்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகள், நேரடியாக பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை அணுகி, விற்பனை செய்யலாம். வியாபாரிகள், கமிஷன் ஏஜென்ட்கள், தொ டர்பு கொள்ள வேண்டாம். மேலும், 100 கிலோ கம்பு தேவைப்படுகிறது. கம்பு பயிரிட்டுள்ள விவசாயிகள், நேரடியாக விற்பனை செய்யலாம். அதுபோல, கிளி மூக்கு மாங்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள், தினமும், 200 கிலோ அளவுக்கு விற்பனைக்கு கொண்டு வரலாம். தவிர தினமும் முலாம் பழம் கொள்முதல் செய்யப்பட உள்ளதால், முலாம் பழம் விவசாயிகள், நேரடியாக விற்பனைக்கு போன் செய்தால், விவசாய பண்ணைக்கே வந்து கொள்முதல் செய்யப்படும். கூடுதல் விபரத்துக்கு, 99444 47261 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம். இத்தகவலை, ஈரோடு விற்பனை குழு துணை இயக்குனர் மற்றும் செயலர் சாவித்திரி தெரிவித்துள்ளார்.