/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடிவேரி தடுப்பணை நுழைவாயிலில் இரும்பு கதவு; இனி அத்துமீறி நுழைய வாய்ப்பில்லை

ADDED : ஜூன் 03, 2024 07:02 AM
கோபி : கொடிவேரி தடுப்பணையில், அனுமதிக்கப்பட்ட வழியை மீறி, சுற்றுலா பயணிகள் நுழையாதபடி, நுழைவு வாயிலில் இரும்பு கதவு அமைக்கப்பட்டுள்ளது.
கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணைக்கு, தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளிக்க வருகின்றனர். விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கானோர் வருவர். நுழைவு கட்டணமாக ஒருவருக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், கும்பலாக வருவோர், ஓசியில் குளித்து சென்றனர்.
இதுகுறித்து நமது நாளிதழில் செய்தி வந்தது. இதன் எதிரொலியாக, நுழைவுச்சீட்டை முழுமையாக பரிசோதித்த பின்னரே, இரு வாரமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.அதேசமயம் நுழைவு வாயிலில் பேரிகார்டு வைத்திருந்தனர். இதன் வழியாகத்தான், பயணிகள் தள்ளிக்கொண்டு அத்துமீறி நுழைந்தனர். இந்நிலையில் நுழைவாயில் பகுதியில், ஆதாரத்துறை சார்பில், 16 அடி நீளத்தில், பத்து அடி உயரத்தில் இரும்பு கதவு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இனி அனுமதிக்கப்பட்ட வழியை மீறி தடுப்பணைக்குள் பயணிகள் நுழைய முடியாது என்று, நீர்வளத்துறையினர் தெரிவித்தனர்.