தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ பாசன நீர் திறப்பு நிறுத்தம்

பாசன நீர் திறப்பு நிறுத்தம்

பாசன நீர் திறப்பு நிறுத்தம்


ADDED : நவ 25, 2025 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2025 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் பாசனத்தில், ஒரு லட்சத்து, 3,500 ஏக்கர் நிலம் பாசனம் பெறும் வகையில் கடந்த ஆக., மாதம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

பாசன பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்வதால், தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு, நேற்று காலை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதே சமயம் அரக்கன்கோட்டை- தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து, 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்றைய நிலவரப்படி அணை நீர்வரத்து, 2,513 கனஅடியாக இருந்தது. நீர்மட்டம், 102.49 அடி; நீர் இருப்பு 30.7 டி.எம்.சி.,யாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us